From Classroom to Boardroom: DMIT's Long-term Impact on Professional Success

எதிர்கால கனவு

Home > blog > எதிர்கால கனவு
November 8, 2022

எதிர்கால கனவு

“ஒரு கனவு நிஜமாவது ஏதோ மாயாஜாலத்தால் நிகழ்வதில்லை. அதற்கு அரும்பாடுபட வேண்டும்; மன உறுதி வேண்டும்; கடின உழைப்பு வேண்டும்”

நாம் நம் குழந்தைகளைக் கனவு காணச் சொல்கிறோமே தவிர, அதற்காக எப்படியெல்லாம் மெனக்கெட வேண்டும் என்பதைச் சொல்லித் தருவதில்லை. பிறரைப் பார்த்து அல்லது நிறைவேறாத நம் ஆசைகளைத்தான் நம் குழந்தைகளிடம் திணிக்கிறோம். ஒரு கட்டத்தில் பொறியியல் படிப்பில் அதிகமாக மாணவர்கள் சேருகிறார்களா… அதில் நம் பிள்ளைகளைச் சேர்க்கப் ஆசைபடுகிறோம். டாக்டர் படிப்புக்கு மவுசா… `நீ எப்பிடியாவது டாக்டராகிடணும். இப்பவே `நீட்’-டுக்குத் தயாராகு!’ என்று குழிகள் நிறைந்திருக்கும் ஏதோ ஒரு பாதையைக் காட்டி, பிள்ளைகளைப் போகச் சொல்கிறோம். ஒரு மாணவனுக்கு எதன் மீது ஆர்வம் அதிகமிருக்கிறது என்று கண்டுகொண்டு, அந்தத் துறையில் அவனைத் தயார்ப்படுத்தும் ஆசிரியரோ, பெற்றோர்களோ இங்கே மிகக் குறைவு. விரும்பாமல் செய்கிற 100 வேலைகளைவிட விரும்பிச் செய்கிற ஒரு வேலை சிறந்தது. இந்த உண்மையை உணர்ந்திருந்த ஒரு தந்தையின் கதை இது!

அமெரிக்கா, க்ளீவ்லேண்டிலிருக்கும் (Cleveland) கிளென்வில்லி ஹைஸ்கூலில் (Glenville High School) அந்த மாணவன் படித்துக்கொண்டிருந்தான். அவனுக்கு அப்போது 12 வயது. ஒருநாள் பாடம் எடுத்து முடித்திருந்தார் ஆசிரியை. வகுப்பு முடிய இன்னும் நேரமிருந்தது. மாணவர்களிடம் `நீங்க எதிர்காலத்துல என்னவாக ஆக விரும்புறீங்கனு ஒரு கேள்வி உங்க பாடத்துல இருக்குல்ல… அதுக்கான பதிலை எழுதுங்க!’ என்றார். ஒரு வரி பதில் அது. எல்லா மாணவர்களும் நிமிடத்தில் அதற்கான பதிலை எழுதிவிட்டார்கள். எழுதிய பேப்பரில் தங்கள் பெயரை எழுதி, ஆசிரியையிடம் கொண்டுபோய்க் கொடுத்தார்கள். எல்லா பேப்பர்களையும் படித்துப் பார்த்தார், அவருக்கு திருப்தியாக இருந்தது, அந்த ஒரு மாணவன் எழுதிய பதிலைத் தவிர.

அன்றைக்கு பள்ளிக்கூடம் முடிந்ததும், அந்த மாணவனின் வீட்டுக்குப் போனார் ஆசிரியை. அவர் போன நேரத்தில், அந்த மாணவனின் தந்தையும் வீட்டில்தான் இருந்தார். ஆசிரியையை வரவேற்றார். அமரச் சொன்னார். மனைவியை அழைத்து காபி கொண்டு வரச் சொன்னார். மாணவனுக்கு டீச்சரைப் பார்த்ததும் உதறலெடுக்க ஆரம்பித்துவிட்டது. அதற்குக் காரணமும் இல்லாமலில்லை. அவனுடைய அப்பா மிகவும் கண்டிப்பானவர். டீச்சரோ சாதாரணமாக யார் வீட்டுக்கும் போகிறவரில்லை. `அவர் இங்கே வந்திருக்காருன்னா, என்னைப் பத்தி ஏதாவது புகார் சொல்றதுக்காகத்தான் இருக்கும்’ மாணவனுக்கு நெஞ்சு `திக் திக்’ என்று அடித்துக்கொண்டது.

“சொல்லுங்க மேடம்… என்ன விஷயம்?’’ நேரடியாக விஷயத்துக்கு வந்தார் தந்தை.

“ஒண்ணுமில்லை. இன்னிக்கி ஸ்கூல்ல ஒரு டெஸ்ட்… ஸ்டூடன்ஸ்கிட்ட உங்க கனவு என்ன, எதிர்காலத்துல நீங்க என்னவா ஆக விரும்புறீங்கனு ஒரு கேள்வி… அதுக்கு உங்க பையன் அபத்தமான ஒரு பதிலை எழுதியிருந்தான்…’’

அப்பா, மகனை அழைத்தார். “பேப்பர்ல நீ என்ன பதில் எழுதியிருந்தே?’’

அவன் தயங்கினான். அப்பாவையும், ஆசிரியையும் மாறி மாறிப் பார்த்தான். பிறகு சொன்னான்… “டி.வி ஷோவுல பெரிய ஆளா வரணும்னு எழுதியிருந்தேன்.’’

அப்பா, ஆசிரியையின் பக்கம் திரும்பினார். “இதுல என்ன தப்பு?’’

“என்ன சார் நீங்களும் புரியாத மாதிரி கேட்குறீங்க… சாத்தியமே இல்லாத ஒண்ணை எழுதுறது அபத்தமில்லையா? இந்தப் பையனாவது… டி.வி ஷோவுல வர்றதாவது! இருக்குறதை விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசைப்படலாமா?’’

அப்பா ஒரு கணம் யோசித்தார். மகனை அவன் அறைக்குப் போகச் சொன்னார். அந்த மாணவன் பயந்து, நடுங்கியபடி தன் அறைக்குள் போனான். இன்றைக்கு அப்பா அடி வெளுத்து வாங்கிவிடுவார் என்று நினைத்துக்கொண்டான்.

அவர் இப்போது ஆசிரியையிடம் சொன்னார்… “ரொம்ப நன்றி மேடம். நான் என் பையனை இனிமே கவனமாப் பார்த்துக்குறேன்.’’

ஆசிரியை கிளம்பிப் போனார். அப்பா, மகனின் அறைக்குள் நுழைந்தார். “சொல்லுப்பா… இன்னிக்கி டீச்சர் எழுதச் சொன்ன கேள்விக்கு புத்தகத்துல இருக்குற பதில் என்ன?’’

“புத்தகத்துல இருக்குற பதில், `நான் ஃபுட்பால் ப்ளேயராக ஆகணும்’கிறது. எல்லாரும் அதைத்தான் எழுதினாங்க. எனக்கு என்னவோ, எதிர்காலத்துல டி.வி-யில பெரிய ஆளா வரணும், எல்லாரும் என்னைப் பார்க்கணும்னு ஆசை. அதனாலதான் `டி.வி ஷோவுல வேலை பார்க்கணும்கிறது என் ஆசை’னு எழுதிவெச்சேன்.’’

அப்பா, மகனை நெருங்கினார். அவன் பயத்தோடு அவரைப் பார்க்க, அவனைத் தழுவிக்கொண்டார்.

“நீ ஒண்ணு பண்ணு. உன் டீச்சர் எதிர்பார்க்கிற பதிலை எழுதி, அவங்ககிட்டயே குடுத்துடு. ஆனா, உண்மையிலேயே நீ என்னவாகணும்னு நீ விரும்புறியோ, அந்தக் கனவை ஒரு பேப்பர்ல எழுதி உன் டெஸ்குக்குக் கீழே வெச்சுக்கோ. அது உனக்கே உனக்கான பேப்பர். தினமும் காலையில படுக்கையிலருந்து எந்திரிச்சதும் அதை எடுத்துப் படிச்சுப் பாரு; ராத்திரி தூங்கப் போறதுக்கு முன்னால அதைப் படி… விடாமப் படி… நீ நினைக்கிற, விரும்புற வாழ்க்கை உனக்குக் கிடைக்கும்.’’ அப்பா போய்விட்டார்.

அந்த மாணவன், அப்பா சொன்னதை வேதவாக்காக நினைத்து அப்படியே கடைப்பிடித்தான். அடுத்த பதினாறே ஆண்டுகள்… அந்த மாணவர் அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆகிவிட்டார். கனவு கண்டு, அதை நிஜமாகவும் ஆக்கிய அந்த மாணவர் அமெரிக்காவின் சிறந்த தொலைக்காட்சித் தொகுப்பாளர்களில் ஒருவர் எனக் கருதப்படும் ஸ்டீவ் ஹார்வி (Steve Harvey).

ஒரு கட்டத்தில் வாரத்தின் ஏழு நாள்களும் தொலைக்காட்சியில் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் தோன்றிக்கொண்டிருந்தார் ஸ்டீவ் ஹார்வி. அவ்வளவு பிரபலமான மனிதராக ஆன பின்னரும், தன் பழைய டீச்சரை அவர் மறக்கவில்லை. ஒவ்வோர் ஆண்டும் கிறிஸ்துமஸ் தினத்தன்று தன் டீச்சருக்கு ஒரு டி.வி-யை பரிசாக அனுப்பிவைப்பதை வழக்கமாக வைத்திருந்தார். ஒருநாள், தொலைபேசியில் டீச்சர் அழைத்தார்… “ஹார்வி! வீட்டுல நிறைய டி.வி சேர்ந்து போச்சு… இனிமே வேண்டாமே!’’

Call Icon

If you have any questions schedule an Appointment

With Our Specialist OR Call Us On 7299 932 010

Back
Call Now
WhatsApp
Messenger
Call Back

Call Now Button