சதுரங்க விளையாட்டு
இந்தியாவில் முதன்முறையாக 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, தமிழ்நாட்டின் சென்னையில் மாபெரும் தொடக்க விழாவுடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உலகெங்கும் உள்ள 180ற்கும் மேற்பட்ட நாடுகளின் பங்கேற்பாளர்களைக் கொண்ட இந்த போட்டியானது, இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறையாக நிகழவிருக்கிறது.
188 நாடுகளை சேர்ந்த பங்கேற்பாளர்கள் இப்போட்டிக்காக பதிவு செய்திருக்கிறார்கள். மேலும், தேசிய சதுரங்க கூட்டமைப்புகளின் தங்கப் பதக்கங்கள், கோப்பைகள் மற்றும் உலகின் சிறந்த சதுரங்கம் விளையாடும் நாடு என்ற பட்டத்தை வெல்வதற்காக இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள்.
சிறப்பு:
சதுரங்கம் மனித இனத்தின் பிரபல விளையாட்டுகளில் ஒன்றாகும்.கி.பி.ஆறாம் நூற்றாண்டில் குப்தர்கள் காலத்தில் இது கொண்டுவரப்பட்டது என்பது சிறப்பு. இது ஒரு விளையாட்டாக மட்டுமன்றி, ஒரு கலையாகவும் அறிவியலாகவும் கூட வர்ணிக்கப்படுவதுண்டு. இது சில சமயம் ஒரு போர் விளையாட்டாகவும், “மூளை சார்ந்த போர்க்கலை”யாகவும் பார்க்கப்படுவதுண்டு. பல விதமான சதுரங்க விளையாட்டுகளும், அதனுடன் தொடர்புடைய சில விளையாட்டுகளும் உலகமெங்கிலும் விளையாடப்படுகின்றன.
ஒருவருடைய பகுதியில் (வெள்ளை/ கறுப்பு) ஓர் அரசன், ஓர் அரசி, இரு மந்திரிகள், இரு குதிரைகள், இரு கோட்டைகள் மற்றும் எட்டு சிப்பாய்கள் காணப்படும். ஒவ்வொரு வகையான காயும் விதம் விதமாக நகரக்கூடியவை. சதுரங்கம் இருவரால் விளையாடப்படும் ஆட்டமாகும். தனது அரசனை பாதுகாத்துக்கொண்டு, எதிரியின் அரசனைப் பிடிப்பதே ஆட்டத்தின் சூட்சமம். எதிரி அரசனை, எதிரி தனது அரசனை பிடித்துவிடுவதற்கு முன்பு பிடித்துவிட்டால் வெற்றி கிடைத்துவிடும். விளையாட்டும் முடிவடைந்து விடும்.
திட்டமிடல்:
உலக அளவில் இது சிறப்பு பெற காரணம், மனித மூளை சம்மந்தமான சவாலான தீர்வுகளுக்கு உதவுகிறது. பள்ளி, கல்லூரி படிக்கும் மாணவர்களின் அறிவு திறனை மேம்படவைக்க உதவுகிறது. (எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு). எட்டு எட்டா மனித வாழ்கை (வயது) பிரிக்கும்போது அதில் ஒவ்வொரு எட்டிலும் நம் வாழ்கை அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது, சதுரங்க விளையாட்டும் 8×8 கட்டங்களை கொண்டுள்ளது. இதில் உள்ள கருப்பு வெள்ளை கட்டங்கை போலதான் வாழ்வில் இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும். சிலர் நம்மளை எட்டி உதைப்பார்கள், தள்ளி விடுவார்கள், எதற்கும் அச்சப்படாமல் மீண்டும் எழுந்து நிற்கவேண்டும். இன்பம் துன்பம் அசிங்கம் ஏமாற்றம் எல்லாவற்றையும் தாண்டிதான் உனக்கான இலட்சிய கோட்டையை அடையமுடியும். அதற்கு சரியான திட்டமிடல் இருக்க வேண்டும்.
அறிவியல் வளர்ச்சி:
மனித மூளைக்கு மட்டுமே உரித்துடையதாகக் கருதப்பட்ட சதுரங்க விளையாட்டை இப்பொழுது, மனிதர்கள் மட்டுமன்றி இயந்திரங்களும் விளையாடத் தொடங்கிவிட்டன. ஆரம்பகாலங்களில் வெறும் ஆர்வம் காரணமாகப் பயன்பட்டுவந்த ஒன்றாக இருந்த போதிலும், கணினி சதுரங்கம் விளையாடும் கணினிகள் வளர்ந்து திறமையான மனிதர்களுக்கே சவால்விடக்கூடிய, சிலசமயம் தோற்கடிக்கக்கூடிய அளவுக்குச் சக்தி மிக்கவையாகிவிட்டன.
இங்கே வியூகம் என்பது ஒரு விளையாட்டிற்கான ஒரு நீண்ட நேர இலக்குக்கான வழிமுறையையும், உத்தி என்பது உடனடியான நகர்த்தலுக்கான தந்திரங்களையும் குறிக்கிறது. சதுரங்க விளையாட்டில் நீண்ட நேர வழிமுறைகளையும், உடனடி உத்திகளையும் வேறுபடுத்தமுடியாது. ஏனெனில் வியூகம் சார்ந்த இலக்குகளை உத்திகள் மூலமே அடையமுடியும். அதே வேளை முன்னைய வியூகங்களே பின்னைய நகர்த்தல்களின் போது உத்திகளுக்கான சந்தர்ப்பங்களை வழங்குகின்றன. வேறுபட்ட வியூகம் மற்றும் உத்தி வழிமுறைகள் காரணமாக ஒரு சதுரங்க விளையாட்டை மூன்று கட்டங்களாகப் பிரிக்கலாம். முதலாவது “தொடக்க ஆட்டம்”, வழக்கமாக இப்பிரிவு ஆட்டம் 10 முதல் 25 நகர்த்தல்களைக் கொண்டிருக்கும். இக் கட்டத்தில் விளையாடுபவர்கள் தங்கள் படைகளை வரப்போகும் போருக்குத் தயார் படுத்துவர். அடுத்தது “நடு ஆட்டம்” இது விளையாட்டின் முதிர்நிலை. இறுதியாக “முடிவு ஆட்டம்”, இக் கட்டத்தில் பொதுவாகப் பெரும்பாலான காய்கள் வெளியேறியிருக்கும். அதனால், அரசனுக்கு விளையாட்டில் முக்கிய பங்கு இருக்கும்.
உளவிழல் சிந்தனை:
யாரும் திடீரெனஅறிவில் சிறந்தவராக மாறமுடியாது, அதற்கு முறையான பயிற்சி முக்கியம்.எந்த துறையாக இருந்தாலும் அதில் சிறந்து விளங்கும் ஒருவரால் தான் உங்களின் எதிர்காலத்தை சரியாக வழி நடத்த முடியும். இன்று சதுரங்க விளையாட்டில் மகுடம் சூட்டும் யாராக இருந்தாலும் அதற்கு பின்னால் கடுமையான முயற்சி இருக்கும். ஒரு பயிற்சியாளர் இருப்பார். அது போலதான் உங்களின் எதிர்காலம் எது என்பதை அறிய ஒரு சிறந்த கேரியர் கவுன்சிலர் முக்கியம். நீங்கள் ஒரு துறையை தேர்வு செய்யும் முன்பு அதில் உங்களுக்கு எவ்வளவு ஈடுபாடு உள்ளது என்பதை அவர்களிடம் சென்று முறையான கவுன்சிலிங் மூலம் தெரிந்து கொண்டு அதில் பயணத்தை தொடரலாம். ஒவ்வொரு ஆண்டும் ராஜா, ராணி, சிப்பாய், போல பலர் தனக்கான இடத்தை அடைய சதுரங்க போட்டி போடுகிறார்கள், அதில் வெற்றி பெற போதுமான அறிவும் சரியான வியூகமும் உன்னிடம் இருக்க வேண்டும். இதற்கு மிக முக்கியமான ஒன்று பயிற்சி…. பயிற்சி… பயிற்சி….முயற்சி….. .முயற்சி….. .முயற்சி…
//உங்கள் எதிர்காலம் என்ன என்று தெரிந்து கொண்டு பயிற்சி மற்றும் முயற்சி தொடங்குங்கள்//