ஞாபகசக்தி - Elysian Inspires

ஞாபகசக்தி

Home > blog > ஞாபகசக்தி
November 10, 2022

ஞாபகசக்தி

உழைப்பால் உயர்ந்தவர்கள் பற்றி நாம் நிறைய தெரிந்து வைத்திருப்போம் நம்பிக்கையும் விடாமுயற்சியும் ஒருவரது வாழ்கையை எப்படி மாற்றுகிறது என்பதற்கு ஒரே உதாரணம் இவர்தான், ஒரு பள்ளி இவரை படிக்க தகுதி இல்லை என்று வீட்டுக்கு அனுப்புகிறது, நட்பு வட்டாரங்கள் கைவிடுகிறது உறவினர்கள் கண்டுகொள்ளவில்லை, ஆனாலும் உலகிற்கே ஒளி கொடுத்த ஒருவரின் விடாமுயற்சி பற்றி தெரிந்துகொள்வோம் இன்று பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இவரின் வாழ்க்கை ஒரு தூண்டுகோலாக இருக்கும்.

கிராமபோனைக் கண்டுபிடித்த விஞ்ஞானி தாமஸ்ஆல்வா எடிசனுக்கு ஞாபகசக்தி துளிகூடக்கிடையாதாம் பள்ளியில் படிக்கும்போது அவரை ஆசிரியர்கள் ‘மக்கு, என்று சொல்வார்கள். ஆசிரியர்கள் சொல்லிக்கொடுப்பதை அவர் கேட்ட நிமிஷமே மறந்து விடுவாராம். இதனால் ஆசிரியர்களுக்கு பெரிய பிரச்சனையாகி விட்டது. இதை அவர்கள் எடிசனுடைய பெற்றோர்களிடம் சொன்னார்கள். அவர்கள் உடனே டாக்டரைக் கூப்பிட்டு எடிசனுக்கு இருக்கும் குறையைச் சொன்னார்கள். எடிசனை பரிசோதனை செய்த டாக்டர்கள், மூளைக்கோளாறு இருக்கிறது என்று கூறினார்கள். இதனால் பெற்றோர்களுக்கு பெரும் கவலையாகி விட்டது. எடிசன் வாழ்க்கையிலேயே மூன்று மாதம்தான் பள்ளிக்குச் சென்றிருக்கிறார். பிறகு அவர் படித்து, கற்றுக்கொண்டதெல்லாம் அவருடைய தாயாரிடம் தான் அவருடைய தாயார் பிள்ளைக்கு இருக்கும் மூளைக் கோளாறை எண்ணி பள்ளிக்கு அனுப்பாமல் தானே பாடங்களைச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். பிறகு எடிசன் பல புத்தகங்களைப் படித்து அறிந்தார். விஞ்ஞான ஆராய்ச்சிக்குத் தேவையான படிப்பை படித்து நன்கு கவனம் வைத்துக் கொள்ளப்பழகிக்கொண்டார். எடிசன் பல ஆராய்ச்சிகள் நடத்தினார் . 1887 ம் வருடம் நவம்பர் மாதம் தம் ஆராய்ச்சியின் மூலம் கிராமபோனைக் கண்டுபிடித்தார்.

எடிசன் இளமையில் தான் அப்படியிருந்தார் என்பதில்லை. பெரியவரான பிறகும் கூட அவருக்கு கவனம் சரியாக இருப்பதே இல்லை. ஒரு சமயம் அவர் வரி கட்டுவதற்காக வரி செலுத்தும் அலுகவகத்துக்குச் சென்றிருந்தார். மக்கள் பணம் செலுத்த வரிசையாக நின்றிருந்தனர். எடிசனும் வரிசையில் நின்றார். வெகு நேரத்துக்குப்பின், அவர் பணம் கட்டவேண்டிய இடத்தை அடைந்தார் பணத்தை பெற்றுக்கொண்ட அதிகாரி, அவர் பெயரைக் கேட்டாராம். எடிசனுக்கு அப்போது தம்முடைய பெயரே மறந்து விட்டதாம். அவர் அப்படி தவிப்பதைக் கண்டு பக்கத்தில் இருந்த அவருடைய அடுத்த வீட்டுக்காரர் அவர் பெயரைச் சொன்னாராம் அதன் பிறகுதான் அவருக்குத் தம்முடைய பெயர் தாமஸ் ஆல்வா எடிசன் என்பது நினைவுக்கு வந்ததாம்.

எடிசன் எப்பொழுதுமே தம்முடைய வேலையில் கண்ணும் கருத்துமாக இருப்பார். எதையாவது ஒன்றைப்பற்றி அவர் சிந்திக்க ஆரம்பித்துவிட்டால் சாப்பிடக்கூட கவனமிருக்காது. இப்படித்தான் ஒருசமயம் எடிசன் இரவு முழுவதும் தனது ஆராய்ச்சி அறையில் வேலை செய்து கொண்டிருந்தார். பொழுது விடிந்ததும் அவர் காலை உணவுக்காக காத்துக் கொண்டிருந்தார். உணவு வர தாமதமாகி விட்டதால் அவர் அப்படியே சோபா ஒன்றில் சாய்ந்து தூங்கிவிட்டார்.

எடிசனுக்கு காலை டீ, பிஸ்கட் ஒரு தட்டில் கொண்டு வந்து வைக்கப்பட்டது. அவர் தூங்கிக் கொண்டிருந்ததால் வேலைக்காரன் அவரை சாப்பிடுவதற்கு எழுப்பவில்லை. அச்சமயம் அங்கிருந்த அவருடைய உதவியாள் ஒருவன் அதை சாப்பிட்டானாம். பிறகு எடிசனை ஏமாற்ற எண்ணி தட்டை காலியாக அவர்முன் வைத்து விட்டானாம்.

சில நிமிஷங்களுக்குப் பிறகு, எடிசன் கண் விழித்து பார்த்தார். எதிரே இருந்த மேஜைமீது உணவு தட்டு காலியாயிருந்தது. அதை பார்த்த எடிசன் தாம் சாப்பிட்டுவிட்டதாகவே எண்ணி விட்டாராம்.

சிறந்த விஞ்ஞானியான எடிசன் இவ்வளவு ஞாபக மறதியாக இருந்தார் என்றால் யாராவது நம்புவார்களா?

இவர் ஒளி விளக்கு, ஒலிவரைவி, திரைப் படக்கருவி உள்ளிட்ட பல கருவிகளை உருவாக்கினார். தனது பெயரில் 1093 கண்டுபிடிப்புகளின் காப்புரிமைகளைப் பதிவு செய்து உள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஹெர்பர்ட் ஹூவர் எடிசனின் உடல் அடக்கத்தின் போது அமெரிக்காவெங்கும் மின்விளக்குகளை, ஒரு நிமிடம் அணைக்கும்படி ஆணையிட்டிருந்தார். அக்டோபர் 21 ஆம் தேதி மாலை 9:59 மணிக்கு அவரது உடல் அடக்கமானது. அக்டோபர் 21 ஆம் தேதி மாலை நியூ யார்க்கில் ‘சுதந்திர தேவி சிலையின் கையில் இருந்த தீப்பந்தம் ஒளி இழந்தது! பிராட்வே விளக்குகள், வீதியில் பயணப் போக்கு விளக்குகளைத் தவிர மற்ற எல்லா விளக்குகளும் ஒளியிழந்தன. சிகாகோ, டென்வர் போன்ற முக்கியமான இடங்களிலும் விளக்குகள் அணைக்கப்பட்டன.

எல்லாம் இருந்தும் இன்றைய தலைமுறை தடுமாறுகிறது, உங்கள் வாழ்விலும் ஒளி வீச உங்களின் எதிர்காலம் பற்றிய தேடலை தொடங்குங்கள். தடுமாற்றம் இருக்கும் பட்சத்தில் எங்களின் கேரியர் கவுன்சிலிங் ஒரு முறை வாருங்கள் உங்களின் தேடுதலுக்கான பதிலை நாங்கள் கொடுக்கிறோம்.

 

Call Icon

If you have any questions schedule an Appointment

With Our Specialist OR Call Us On 7299 932 010

Back
Call Now
WhatsApp
Messenger
Call Back

Call Now Button